Log In

Sign Up
Home
 
தமிழ்க் கத்தோலிக்கம் 
Site menu
Our poll
தள மதிப்பீடு
Total of answers: 65
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

செபம்

இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமhttp://carolaround.com/wp-content/uploads/2013/03/prayer.jpgத்தில், இந்தக் கட்டுரையை வாசிக்கின்ற ஒவ்வொரு அன்பு நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன். செபத்தைக் குறித்த இந்தச் செய்தி இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது என்பதில் துளியும் சந்தேகமில்லை. இப்புதிய நூற்றாண்டின் தலைமுறை, செபத்தையும் அதனால் ஏற்படுகின்ற நன்மையான விளைவுகளையும் மறந்துபோனார்கள், என்பதே நிதர்சனமான உண்மை. சரி புதிய தலைமுறையினர் தான் இப்படியென்றால், பழைய தலைமுறையினரும் செப வாழ்க்கையிலே மிகவும் பின்தங்கியே காணப்படுகிறார்கள். ஒரு காலகட்டத்தில், ‘செபித்தால்தான் சோறு’ என்பதையெல்லாம் மறந்து இப்போது கிறிஸ்தவ வீடுகளில் செபச் சப்த்தம் மறைந்துபோய்ப் பிசாசின் சப்த்தம்தான் கேட்கமுடிகிறது (சினிமா பாடல்களும், கேளிக்கை நிகழ்ச்சிகளும், வீட்டிற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளும்).

சரி! போனது போகட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப, நம்முடைய பழைய தன்மைகள் மாறட்டும். செபச் சப்தங்கள் இனி நம் இல்லங்களையும், உள்ளங்ககளையும் நிரப்பட்டும். இனி வருகின்ற பொல்லாத நாட்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நமது கண்ணீர் சிந்தும் செபமே ஆயுதமாக மாறட்டும்.

நல்லது! முதலாவதாக நாம் செபம் என்றால் என்ன என்பதையும் எப்படியெல்லாம் செபிக்கக்கூடாது என்பதையும் பார்த்துச் செபித்து முடிக்கப்போகிறோம்.

செபம் என்றால் என்ன?

செபம் என்பது நம்மைப் படைத்த இறைவனோடு நாம் பேசுவதும், பின்பு அவர் பேசுவதைக் கேட்பதும் என்பது பொதுவான கருத்து. இப்படிப் பல்வேறு விடைகளையும், விளக்கங்ககளையும் நாம் பெறலாம். ஆனால் மிகச் சிறப்பான விடை என்னவென்றால், செபம் என்பது நாம் இறைவனோடு ஐக்கியப்படுவது அல்லது ஒன்றிணைவது. இன்னும் சொல்லப்போனால் இறைவனோடு இணைவதற்கு நாம் செய்யும் எல்லா முயற்சிகளும் செபமே.

செபத்தைக் குறித்துப் பொதுவாக ஒரு தவறான கண்ணோட்டம் நம்மில் இருக்கிறது. செபம் என்றால் இறைவனிடம் நமக்குச் சப்தந்தான் தேவைகளைக் கேட்பது அல்லது விண்ணப்பம் செய்வது என்று நினைக்கிறோம். நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இறைவனிடத்தில் சென்று விண்ணப்பம் செய்வது மட்டுமே செபமென்று கருதக்கூடாது. அது செபத்தில் ஒரு பங்கு அவ்வளவுதான்.

ஒரு செபமென்று சொன்னால் அதில் நிறையக் காரியங்கள் அடங்கியிருக்கின்றது. நன்றி செலுத்துதல், தியானித்தல், விண்ணப்பித்தல், காத்திருத்தல் போன்ற பல காரியங்கள் அடங்கியிருக்கின்றன.

சரி! செபம் என்றால் என்ன என்று பார்த்தோம். இப்பொழுது நம் செபத்திற்கு வரும் பொதுவான தடைகள் அல்லது செபங்கள் கேட்கப்படாமல் போவதற்கான காரணங்கள் என்ன என்பதையும் சற்றுப் பார்ப்போமா?

செபங்கள் கேட்கப்படாமல் போவதற்கான காரணங்கள் சில:

 1. நாம் பாவத்தை வைத்துக்கொண்டு தூய இறைவனிடம் செபித்தல்.
 2. இறைவனுடைய சித்தத்தை அல்லது திட்டத்தை அறியாமல் இருத்தல்.
 3. நம் நோக்கம் சரியாக இல்லையென்றால் அல்லது கீழ்த்தரமான ஆசைகளாக இருத்தல்.
 4. முழு நம்பிக்கை இல்லாமல் செபித்தல்.

1) பாவம்

ஏன் என் செபம் கேட்கப்படவில்லை என்னும் கேள்வி உங்களுக்கு எழும்புமாயின், உங்களைத் தற்பரிசோதனை செய்துபாருங்கள். “என்னிடத்தில் என்ன பாவம் இருக்கிறது”என்று , எனென்றால் நம் செபம் கேட்கப்படாமலிருக்க மிக முக்கிய காரணமே பாவம்தான். இறைவல்லுநர்கள் கூறுகிறார்கள் நம் செபம் கேட்கப்படாமலிருப்பதற்கு எண்பது சதவீதம் (80%) நம்முடைய பாவங்களே காரணம். நம் முன்னோர்கள் செய்த பாவங்கள்கூடச் சாபங்களாக மாறி மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் நம் செபங்களுக்குத் தடையாக இருக்கலாம். சரி பாவம் என்றால் என்ன?

 • இறைவனுடைய கட்டளைகளை மீறுவதே பாவம், ஆகவே இறைவனுடைய கட்டளைகளை மீறாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
 • நன்மை செய்யத் தெரிந்திருந்தும் செய்யாமல் இருப்பதே பாவம்.
 • அநீதியான எல்லாமே பாவம்தான்.

விவிலியத்தில் நாம் தெளிவாகப் பார்க்கும்போது, செபம் கேட்கப்படாமலிருக்க நம் பாவங்களே முதன்மை தடையாக இருப்பதைக் காணலாம். (இதோ சில இறைவார்த்தைகள்)

 • ஏசாயா 1:15
 • நீதிமொழிகள்
 •  எரேமியா

2) இறைவனுடைய சித்தத்தை அல்லது திட்டத்தை அறியாமல் இருத்தல்.

ஏன் நம் செபம் கேட்கப்படவில்லை? ஒருவேளை நீயும் நானும் ஆண்டவருடைய சித்ததை அறியாமல் செபித்துக்கொண்டு இருக்கலாம். எப்படியாவது செபித்து ஆண்டவரிடத்திலிருந்து ஒரு காரியத்தை அடைந்துவிடவேண்டும் என்ற முனைப்பு காட்டுகின்ற நாம் ஒரு தலையாய காரியத்தை மறந்துபோகிறோம். ஆண்டவருடைய சித்தம் இந்தக் காரியத்தில் நமக்குச் சாதகமாக இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்கத் தவறுகின்றோம்.

இன்று இளைஞர்கள் மத்தியில் பொதுவாக உள்ள பிரச்சனை என்ன? தொட்டதும் படித்ததும் எனக்கு வேண்டுமென்று கண்மூடித்தனமாக ஆசைப்படுகின்றார்கள். பின்பு ஆண்டவரே! ஆண்டவரே! எனக்கு இதைத் தரமாட்டீரோ என்று அர்த்தமில்லாமல் செபம் செய்கிறார்கள். ஆண்டவர் உங்கள் செபத்தைக் கேட்டு அற்புதம் செய்வார் என்று மனக்கோட்டை காட்டாதீர்கள்.

இதை வாசிக்கின்ற என்னன்பு நெஞ்சங்களே! தயவுசெய்து ஒரு காரியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். செபம் செய்யப் போவதற்கும் முன்னால் இந்தச் செப விண்ணப்பம் ஆண்டவருடைய விருப்பத்தின்படிதான் இருக்கிறதா? என்று ஆராய்ந்துபார்த்துச்  செபிப்பது சாலச்சிறந்தது, அப்போதுதான் உங்கள் செபம் கேட்கப்படும். ஒருவேளை உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம். நாம்  செபிக்கப்போகின்ற இந்தச் செப விண்ணப்பம் ஆண்டவருடைய விருப்பத்தின்படிதான் அமைந்து இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதென்று.

ஆண்டவருடைய விருப்பத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் அவர் யார்? அவருடைய சுபாவம் என்ன? அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் நாம் அறிந்துகொள்ள இறைவார்த்தையை நன்கு தியானிக்கவேண்டும். இன்னும் தூய ஆவியானவர் நம்மை நிரப்பி வழிநடத்தும்படி நம்மை முற்றிலுமாக அர்ப்பணிக்கவேண்டும்.

சகோ. ப்ரதீஷ்

இதன் தொடர்ச்சியை செபம் - II ல் காண்க

 

 

 

 

Log In
Search
Calendar
«  சூலை 2019  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
Site friends
 • Official Blog
 • uCoz Community
 • FAQ
 • Textbook

 • உரிமை தமிழ்க் கத்தோலிக்கம் © 2019